"தெய்வ
திருமகள், தாண்டவம் படங்களின் இயக்குனர் விஜய், அடுத்ததாக நடிகர் விஜய்
நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கோலிவுட்டிலும், விஜய் ரசிகர்களிடமும்,
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் வேலைகள், விறு
விறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் கதை என்ன என்பது குறித்து, பட
குழுவினர் மூச்சு விட மறுக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில், நீரவ் ஷா
ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள, மற்ற நடிகர்களை தேர்வு
செய்வதில், இயக்குனர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆனாலும், படத்தில் விஜயுடன்
ஜோடி சேரப் போவது யார் என்பது தான், விஜய் ரசிகர்களின் பெரும்
எதிர்பார்ப்பாக உள்ளது. அனேகமாக, "நான் ஈ ஹீரோயின் சமந்தா, ஜோடி சேரலாம்
என, கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கசிந்தாலும், இந்த தகவல் இன்னும் உறுதி
செய்யப்படவில்லை
No comments:
Post a Comment